கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மகா காளேஷ்வரர் ஆலயம்

மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயத்தில், 11 இலட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சிவஜோதி அர்ப்பணம் மஹோற்சவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்வை முதலமைச்சர் சிவராஜ்சிங்சவுகான் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தன்னார் வலர்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துள்ளனர். இந்த நிகழ்வை 5 பேர் அடங்கிய கின்னஸ் குழுவினர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ் அளித்துள்ளனர்.

Spread the love