எரிபொருள் வரிச்சலுகை கிடைக்காவிடின் விலை அதிகரிக்க நேரிடும்

எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை தற்காலிகமாக இரத்துச் செய்யாவிடின் ஒரு லீற்றர் டீசலின் விலையை 52 ரூபாவாலும், பெற்றோலின் விலையை 19 ரூபாவாலும் அதிகரிக்க நேரிடும் என வலுசக்தி துறை அமைச்சர் உதயகம்மன் பில தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைமையில் எரிபொருளுக்கான வரி விலக்கு வழங்க வேண்டும் அல்லது எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும். இவ்விரண்டையும் செயற்படுத்தாவிடின் எரிபொருள் கொள்வனவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றார். இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பல இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Spread the love