எரிபொருளின்றி செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள்


எரிபொருளின்றி செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள் பொருள் பற்றாக்குறை காரணமாக சபுகஸ்கந்த மற்றும் யுகதனவி மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தேசிய மின்கட்டமைப்புக்கு 370 மெகாவாட்ஸ் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம், உலை எண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையில் எரிபொருள் இன்மையால் அதன் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. அதையடுத்து தேசிய மின் கட்டமைப்பு, 270 மெகா வாட்ஸ் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காலை சபுகஸ்கந்த ‘ஏ’ மற்றும் ‘பி’ மின் நிலையங்கள் எரிபொருள் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளன. இதனால் தேசிய மின்கட்டமைப்புக்கு 100 மெகாவாட்ஸ் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தியின் மூலம் பகல் வேளையில் இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும் என்றாலும், இரவு வேளையில் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகின்றது. 

Spread the love