உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பமாக உள்ளதால்  டோகாவிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கட்டாரின் தலை நகர் டோகாவிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்தும் மேற்படி போட்டியை பார்ப்பதற்கு அதிகளவான வெளிநாட்டு ரசிகர்கள் தலைநகர் டோகாவில் தங்குவர் என எதிர்பார்க் கப்படகின்றது. இவ்வாறான நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் ஆசிய மற்றும் ஆபிரிக்க தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love