இலங்கையின் முதலாவது கெமுனுபடைப் பிரிவின் தமிழ் இராணுவ உத்தியோகத்தர் காலமானார்

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கெமுனு இராணுவப் அணியின் முதலாவது படைப்பிரிவில் இணைந்து கொண்ட தமிழ் இராணுவ உத்தியோகத்தரான விஸ்வலிங்கம் என்பவர் தனது 90 வது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். 1932 ஆம் ஆண்டு கைதடியில் பிறந்த விஸ்வலிங்கம் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கெமுனுப் படைப்பிரிவின் இணைந்து கொண்டார்.

பயிற்சி சிப்பாயாக இணைந்து கொண்ட விஸ்வலிங்கம் இராணுவப் பயிற்சியை தியத்தலாவ இராணுவ முகாமில் தனது ஆரம்ப பயிற்சியை முடித்தார். அதன் பின் கெமுனுப் படை அணியில் உள்வாங்கப்பட்டு திறமை உள்ள ஒரு அதிகாரியாக லான்ஸ் கோப்ரல், சார்ஜன்ட் மற்றும் வர்ண சார்ஜன்ட் ஆகிய பதவி நிலை அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டார். இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கைதடியில் உள்ள அவரது இல்லத்தில் வாசித்து வந்த நிலையில் இயற்கையை எய்தினார். அவரது மரணச் சடங்கை கெமுனுப்படை பிரிவு குண்டு மழை பொழிய இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Spread the love