இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !

இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவேண்டிய தேவை ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இடமாற்றம் தொடர்பாக தொழிற்சங்க சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும் ஏற்றுக்கொள்ளாமலும், வடமாகாண கல்விப்பணிப்பாளர் தன்னிச்சையாக ஒருதலைப்பட்சமாகவே செயற்பட்டு வருகின்றார். இதன் மூலமே இன்று கல்வித்துறைக்கு மிக நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

நாம் கூறவருவது யாதெனில் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த இடமாற்றங்கள் அதாவது வெளிமாவட்ட ஆசிரியர்களின் சேவையின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் கல்வி அமைச்சின் அலுவலகத்தையும், ஆளுநர் செயலகத்தையும் முடக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

நாம் கூற வருவது யாதெனில் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த இடமாற்றங்கள் அதாவது வெளிமாவட்ட ஆசிரியர்களின் சேவையின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் கல்வி அமைச்சின் அலுவலகத்தையும், ஆளுநர் செயலகத்தையும் முடக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இது தவறு, இடமாற்ற கொள்கையானது அனைவருக்கும் பொதுவானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், அவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அந்தந்த பதவி நிலைக்குரிய உத்தியோகத்தரது கடமையுமாகும் என்று தெரிவித்தார்.

Spread the love