இலங்கையை கடனில் இருந்து  மீட்க பாரிஸ் குழுவுடன் இங்கிலாந்து அரசு பேச்சுவார்த்தை

இலங்கையின் நெருக்கடி மிக்க கடன் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து பாரிஸ் குழு (Paris Club) உறுப்பினர்களுடன், இங்கிலாந்து அரசாங்கம், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாரிஸ் கிளப் என்பது முக்கிய கடன் வழங்கும் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் குழுவாகும். கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கட்டணச் சிக்கல்களுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறிவதே இந்தக்குழுவின் பணியாகும்.

இந்தநிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட இலங்கையின் நிலைமையை இங்கிலாந்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் விக்கி ஃபோர்ட் தெரிவித்தார்.

இங்கிலாந்து, இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றில் கூறினார். கடன் சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதங்களை ஆரம்பிப்பதையும் இங்கிலாந்து வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்தார்..

Spread the love