தொல்பொருட்கள், கலைப் பெறுமதி கொண்ட பொருட்களை மீள ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குச் சொந்தமான தொல்பொருட்கள் அல்லது கலைப் பெறுமதி கொண்ட பொருட்களை மீள ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி செயலகத்தில் பொருட்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்த போது, ​​முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் சின்னங்கள் உட்பட பல்வேறு பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அரச சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் இந்த உத்தியோகபூர்வ அடையாளங்களை வைத்திருப்பது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் போன பொருட்கள் தொடர்பில் யாரேனும் தகவல் அறிந்தால், 0112354354 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சின்னங்களை கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவி மிகவும் முக்கியமானது என்றும், அவர்களின் உதவி மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love