கடன் மறுசீரமைப்பின் பின் இலங்கைக்கு உதவுவோம் சர்வதேச நாணய நிதியம்

கடன் மறுசீரமைப்பின் பின்னர் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவோம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்படவேண்டும் என குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கையில் ஏற்கெனவே செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Spread the love