இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் குழு ஒன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் ஆய்வு பணியாகவே இந்த குழுவின் விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த குழுவினருடன் வருகை தருவார் என கூறப்படுகிறது.

Spread the love