இறக்குமதி கட்டுப்பாட்டின் ஊடாக 2500 மில்லியன் டொலரை தம்மால் சேமிக்க முடிந்தது-ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து சில பொருட்களின் இறக் குமதி கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 2500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத் தலைமைய கத்தில்நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற  சர்வதேச சுங்க தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக எரிபொருள், மருந்துகள், உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை . 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடும் வகையில், நாடு கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு வருடம் வராது.ஆனால், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் தாங்கள் அனுபவித்த துன்பங்களை மறந்துவிட்டனர் சுதந்திரத்திற்குப் பிறகு நாம் அனுபவித்த மிகக் கடினமான ஆண்டு 2022 என்று நான் கூறினால் அது மிகையாகாது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், நிதியமைச்சு சுமார் 1,465 HS குறியீடுகளை முற்றிலுமாக தடைசெய்து. பட்டங்கள், ரோஜா பூக்கள், பல்லுக்கு குத்தும் குச்சி மற்றும் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், வரிகளை உயர்த்துவது, அறிவித்தல் வழங்குவது போன்ற பிற வழிகளில் இறக்குமதியைக் கட்டுப்படுத்தாமல் அந்தக் கடுமையான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. பின்னர், பல HS குறியீடுகள் தடையிலிருந்து மீளப்பெறப்பட்டன, அதே நேரத்தில் 685 பொருட்கள் இன்னும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, எம்மால் இதுவரை 2,500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Spread the love