இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தை விட நாட்டின் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கைக்கு தற்போது சிறந்த மரியாதை உள்ளது .இலங்கை நிலையான வளர்ச்சியை அடைவதற்கு சில சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் சர்வதேச அமைப்புகளும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நீண்ட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதேவேளை சர்வதேச நிறுவனங்களின் உதவியை அரசாங்கம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட விடயங்கள் கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பொருளாதாரம் சரியான திசையில் செல்வதால், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் உட்பட எஞ்சியுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love