இரண்டு ரிலீஸ் தேதியை ரிசர்வ் செய்த ‘வலிமை’

 ‘வலிமை’ திரைப்படத்தின் படக்குழுவினர் இரண்டு ரிலீஸ் தேதியை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 ஆகிய இரண்டில் ஒன்றில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படும் என்றும் குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் என்று தற்போது இருக்கும் நிலை மாறி 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை பொருத்தே ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love