மருந்துப் பொருட்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால் உதவுவதற்காக, 1999 சுவசெரிய சேவை இலக்கத்தினூடாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினூடாக இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நோயாளி ஒருவருக்கு ஏதேனுமொரு மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுமாயின், 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் குறித்த நோயாளிக்கு தேவையான மருந்துகளை எங்கிருந்து பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றை இலகுவாக பெற்றுக்கொள்ளும் முறை என்பன தொடர்பில் உரிய தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவுறுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த சேவையை 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவு ஒருங்கிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love