அஸ்வினின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’படம் ஓரளவு சுமாரான வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஸ்வின் அடுத்த திரைப்படத்தையும் சத்தமில்லாமல் நடித்து முடித்து விட்டார். அஸ்வின் நடித்த அடுத்த படத்தை இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ’கும்கி 2’ என்ற படத்தை இயக்கி வரும் பிரபுசாலமன் அஸ்வின் நடித்து வரும் படத்தை இயக்கி உள்ளார் என்றும் இந்த படமும் பழங்குடியின மக்களின் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Spread the love