இந்தியா – இலங்கை, ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்து

இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்து நிற்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன என சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கீழ் சொல்லப்படும் முக்கிய திட்ட வரைபுகளும் அந்த ஆறு ஒப்பந்தங்களுள் கைச்சாத்தாகியுள்ளன. அதாவது இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற திட்ட வரைபுகள் அப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் கைச்சாத்தாகின.

Spread the love