இணையத்தில் ட்ரெண்டான சாய் பல்லவி – நியூ லுக்

சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்த சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்க, விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

கடந்த ஜென்ம ஞாபகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடிக்க அருக்கு ஜோடியாக கீரித்தி ஷெட்டி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகிய நாயகிகள் நடித்துள்ளனர்.

இதில் சாய்பல்லவி தேவதாசியாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு தவிர தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி இளவயது தேவதாசியாகவும், முதிய பெண்மணியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது முதுமையான சாய்பல்லவிக்கு மேக்கப்போடும் மேக்கிங் BTS வீடியோவும், புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Spread the love