ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டத்தில் ஆசிய சாதனை படைத்த யுப்புன்

தெற்காசியாவின் அதிவேக வீரர் யுப்புன் அபேகோன், ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இத்தாலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேர்சோ கிண்ணம் 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டு இத்தாலி வீரர்களின் சவால்களை முறியடித்து யுப்புன் அபேகோன் வெற்றிபெற்று புதிய ஆசிய சாதனையை படைத்தார்.

அப்போட்டியை 15.16 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன், இந் நிகழ்ச்சிக்கான புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் ஜப்பான் வீரர் யோஷிஹைத் கிரியு 2017 ஆம் ஆண்டு நிலைநாட்டியிருந்த 15.35 செக்கன்கள் என்ற முந்தைய ஆசிய சாதனையை யுப்புன் அபேகோன் முறியடித்தார்.

Spread the love