அவதார்-2 , முதல் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள டிஸ்னி

பல வருட எதிர்பார்ப்பின் பின் ஜேம்ஸ் கமரூனின் அவதார் -2 ஆம் பாகத்தின் முதல் ஒளிப்படங்களை டிஸ்னி நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் மே 6 இல் திரையரங்கில் வெளியாகக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபா பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் அவதார்.

இந்தப் படத்துக்கு 3 ஒஸ்கார் விருதுகள் கிடைத்தன. இந்த நிலையில் அவதார்- 2 ஐ 2021 ஆம் ஆண்டு வெளியிட இருந்த நிலையில் கொரோனாவால் இந்தப் படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று ஒத்திவைக்கப்பட்டது. 3டDயில் உருவாகியுள்ள இந்தப் படம் 160 மொழிகளில் இந்த வருடம் செப்ரெம்பரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love