அமெரிக்க மக்களின் ஆயுட்கால வீதம் சரிவடைந்துள்ளது- ஆய்வு முடிவுகள்

அமெரிக்க மக்களின் ஆயுட்காலம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

1996ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயுட்கால வீதம் சரிவடைந்துள்ளது கொவிட் 19 தொற்றினால் இந்த நிலை தோன்றியுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் 79 ஆக இருந்த ஆயுட்காலம் தற்போது 76.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்வீக குடிமக்கள் மற்றும் அலெஸ்காவில் வாழும் மக்களின் ஆயுட்காலமும் இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது. தற்காலிக தரவுகளின் படி 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் மக்களின் ஆயுள் 2.7 வருடங்கள் குறைவடைந்துள்ளது.

Spread the love