அப்பிள் ஐபோன் 14ல் செயற்கைகோள் இணைப்பு

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 ல், அவசரகால உதவிக்காக, செயற்கைகோள் தொடர்பு வசதி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செயற்கைகோள் இணைப்பு வசதியை பயன்படுத்தி, அவசர காலத்தில், மெசேஜ் அனுப்புவது மற்றும் பதில் பெறுவது ஆகியவை முடியும். குறிப்பாக, விபத்து போன்றவற்றில் சிக்கிக்கொண்டால், இந்த இணைப்பை பயன்படுத்தி, பலன் பெற முடியும். போனில் சிக்னல் வசதி இல்லாவிட்டாலும், செயற்கைகோள் இணைப்பின் வாயிலாக, உதவி கோர இயலும்.

இதற்குமுன், ஐபோன் 13ல் இத்தகைய வசதியை, அப்பிள் வழங்க இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை . இப்போது ஐபோன் 14ல் இந்த வசதி கிடைக்கும் என கூறப்படுகிறது, வந்தால் தான் உறுதி ஆகும். ஐபோன் 14ல் மட்டுமின்றி; நிறுவனத்தின் அனைத்து போன்களிலும் இந்த அவசரகால வசதியை வழங்குவது குறித்தும் அப்பிள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Spread the love