QR முன்னோடி திட்டம் முன்னெடுத்தல் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

QR நடைமுறையின் கீழ் எரிபொருள் விநிகோகிக்கும் முன்னோடித் திட்டத்தை 5 இடங்களில் செயற்படுத்த முடியவில்லை என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முற்பதிவுகள் வழங்கப்படாமை, முற்பதிவினை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

QR நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்கும் முன்னோடித் திட்டம் குறித்த 5 இடங்களிலும் அடுத்த இரண்டு நாட்களில் செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

QR முறையைப் பயன்படுத்தி எரிபொருளை வழங்கும் முன்னோடித் திட்டம் நாடளாவிய ரீதியில் 20 இடங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன் கீழ் 4,708 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இதேவேளை, QR திட்டத்தின் மூலம் எரிபொருளைப் பெறுவதற்கு 35 இலட்சத்து 23 ஆயிரத்து 729 பேர் பதிவு செய்துள்ளனர்.

Spread the love