இலங்கையுடனான வர்த்தக உறவு முற்றிலும் ஸ்தம்பித்துபோய் உள்ளதாக ஏற்றுமதியாளர்களின் கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (எவ்.ஐ.ஓ) துணைத் தலைவர் காலித்கான் கூறியதாவது இலங்கை உடனான எமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முற்றிலும் ஸ்தம்பித்து உள்ளது. அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணகொடுக்கல் வாங்கல் விவகாரங்களை இந்திய ஏற்றுமதியாளர்கள் மிக கவனமாக கையாண்டு வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களுக்கு இலங்கை பணம் தரவேண்டியுள்ளது. ஆனால், தற்போது அங்கு நிலவும் சூழல் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அச்சத்தையும், சோகத் தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றால் மட்டுமே நிலைமை ஓரளவுக்கு மேம்படும் சூழல் உள்ளது என்றார். எவ் ஐ.ஓ-வின் தலைமை இயக்குநர் அஜய் சகாய்களின் கடன் திட்டங்களின் கீழாகவே இலங்கைக்கு தேவையான தொழிற்சாலை மூலப்பொருள்கள், மருந்துகள், உரம், உணவு மற்றும் புடவை ஆகியவை தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்றார். கடந்த 2021-22-இல் இந்தியாவிலிருந்து 580 கோடி டொலர் மதிப்பிலான பொருள்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோன்று, இலங்கையிலிருந்து 100 கோடி டொலர் மதிப்பிலான பொருள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன.