50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கும் முயற்சியில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்படும் எனவும், ஏனைய பிரதேசங்களின் புவியியல் நிலைமைகளின் அடிப்படையில் விரிவுபடுத்தப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மலையகம் மற்றும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பஸ்களில் டிஜிட்டல் டிக்கெட் அமைப்பு பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love