4 விருதுகளை தட்டி சென்ற ஜோஸ்பட்லர்

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஜோஸ்பட்லருக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வென்ற குஜராத் அணிக்கு 20 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 12 கோடி ரூபா வழங்கப்பட்டது. 3 ஆம் இடம்பெற்ற பெங்களுரு அணிக்கு 7 கோடி ரூபா, 4 ஆவது இடத்தை பிடித்த லக்னோ அணிக்கு 6.5 கோடி ரூபா வழங்கப்பட்டது. இத்தொடரில் அதிக ஓட்டங்கள் (863) குவித்த ராஜஸ்தானின் ஜோஸ்பட்லருக்கு 10 இலட்சமும், அதிக விக்கெட் (26) கைப்பற்றிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகலுக்கு 10 இலட்சமும் வழங்கப்பட்டது.

அதிக சிக்சர் (45) அடித்த ஜோஸ் பட்லர் 10 இலட்சம் பெற்றார். ஆட்டத்தை மாற்றுபவர் விருது ஜோஸ் பட்லர் (10 இலட்சம் பரிசு) பெற்றார். தொடர் நாயகன் விருதையும் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார். வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (ஐதராபாத்) தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 10 இலட்சம் வழங்கப்பட்டது. சிறந்த கேட்ச் விருது லக்னோ அணி வீரர் எவன் லீவிஸ் (கொல்கத் தாவுக்கு எதிராக) பெற்றார். இறுதிப் போட்டியில் 157.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய குஜராத்தின் பெர்குசன் இத்தொடரின் அதிக வேக பந்துவீச்சாளர் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love