32 வகை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி

நாட்டின் உணவு உற்பத்திகளில் 32 வகை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் இந்த உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

29 வகையான கடற்றொழில் நீரியல் உற்பத்தி இதில் அடங்குகின்றன. சீன அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 இலங்கை நிறுவனங்கள் இவற்றின் ஏற்றுமதியாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

சீனாவுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி பொருட்களை பரிசோதித்தல் எள்ளிட்ட விடயங்களுக்காக , சீன அரசாங்கத்தின் சுங்க பகுதிக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்தில் அமைச்சர் இந்தவியடங்களை குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:

இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளை பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனை பணிமுறை முன்னேற்பாடு

எமது நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீனக் குடியரசின் பொதுச் சுங்க நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 29 உற்பத்திகள் நீரியல் வள உற்பத்திகளாக காணப்படுவதுடன், சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுக்கு நீரியல் வள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், மற்றும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமுத்திர மீன்பிடி நீரியல் வள  உற்பத்திகளைப் பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனைப் பணிமுறை முன்னேற்பாடு (Protocol), சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Spread the love