இன்று(05) இடம்பெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு

2023ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(05) இடம்பெறவுள்ளது. புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் இன்று(05) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இன்று(05) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான உரிய பரிந்துரைகளை வழங்க பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேநேரம், இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட பாராளுமன்ற குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனையும் இன்று(05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Spread the love