ஹரி பொட்டரின் கண்ணாடிகள் ஏலம்

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜே.கே.ரொவ்லிங் எழுதி 1997இல் புத்தகமாக வெளியான கதை ஹரி பொட்டர் மொத்தம் 7 பாகங்களாக வெளியான இந்த கதை 8 பாக ஹொலிவூட் திரைப்படமாகவும் வெளியாகி உலகெங்கும் பொக்ஸ் ஓ பிஸ் வசூலை குவித்தது. இந்த படத்தில் ஹரி பொட்டராக டேனியல் ராட்க்ளிப் நடித்திருந்தார். இந்த ஆண்ருடன் ஹரி பொட்டர் கதையின் முதல் புத்தகமான ‘ரசவாதியின் கல்” வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதை உலகம் முழுவதுமுள்ள ஹரி பொட்டர் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஹரி பொட்டர் படத்தின் டேனியல் ராட்க்ளிப் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை ஏலத்தில் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மொத்தமாக 52 கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கண்ணாபுகள் 20 ஆயிரம் ப்ரிட்டிஷ் பவுண்டுகள் அல்லது 22 ஆயிரம் டொலர்கள் வரை ஏலத்தில் போக வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Spread the love