வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விஸா(visa)- இந்திய மத்திய அரசு

ஐந்து இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு, இலவச விஸா வழங்கப்படுமென, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்றுப் பரவலினால் தடைப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பிய நிலையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில், இலவச விஸாக்கள் வழங்கப்படுமென, மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் நோக்கில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விஸா சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டார். அதேநேரம் 170 நாடுகளில் மீண்டும் இ-விஸா வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனிவரும் காலங்களில், இந்தியத் தூதரகங்களுக்கு விஸாவிற்காக செல்லவேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர் கூறினார்.

Spread the love