விளாடிமிர் புட்டின் ஒரு போர் குற்றவாளி – கொதித்தெழுந்த ஜோ பைடன்!

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு போர் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார்.

உக்ரைன் நகர் ஒன்றில் அமைந்துள்ள தியேட்டர் ஒன்றினுள் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்து இருந்த பொதுமக்கள் மற்றும் உணவு வாங்க காத்திருந்த அப்பாவி பொது மக்கள் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா சார்பில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் கடுமையான கண்டனத்தையும் தமது எதிர்ப்பினையும் பதிவுசெய்தன. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கூறும்போது “ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு போர் குற்றவாளி ” என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளாடிமிர் புட்டின் செய்து வரும் செயல்கள் முற்றிலும் மன்னிக்கமுடியாதவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நாள்முதல் இன்று வரை சுமார் முப்பது லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மேரிபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றின் மீது ரஷ்யா வீசிய அதி சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், பலர் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அதாவது இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் காயமுற்றனர் என்ற தகவல்கள் எதுவும் சரிவரத்தெரியவில்லை என உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களின்படி இந்த தியேட்டரில் பாதுகாப்பு தேடி சுமார் 500 பேர் வரை பதுங்கி இருந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இது இப்படி இருக்கும்போது, இப்படியான ஒரு  தாக்குதல் நடைபெறவே இல்லை என மாஸ்கோ கடுமையாக மறுத்துள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சகம், தங்களின்  படைகள் கட்டிடத்தை தாக்கவில்லை என தெரிவித்து இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன்,உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடகிழக்கில் அமைந்துள்ள செர்னிஹிவ் பகுதியில் உணவுக்காக காத்திருந்த பத்து பேரை ரஷ்ய படைகள் கொன்று விட்டதாக கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது.  

இப்படியான ஒரு  தாக்குதல் நடைபெறவே இல்லை என மாஸ்கோ கடுமையாக மறுத்துள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சகம், தங்களின்  படைகள் கட்டிடத்தை தாக்கவில்லை என தெரிவித்து இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன்,உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடகிழக்கில் அமைந்துள்ள செர்னிஹிவ் பகுதியில் உணவுக்காக காத்திருந்த பத்து பேரை ரஷ்ய படைகள் கொன்று விட்டதாக கீவ் நகரில் உள்ள அமெரிக்கதூதரகம் தெரிவித்து உள்ளது.

 

 

Spread the love