ஹிந்தியிலும் வருகிறது “விக்ரம் வேதா”

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் வேதா. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து வருகின்றனர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, இதில் விக்ரமாக சைப் அலிகானும் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாள் என்பதால் அப்படத்தில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்

Spread the love