வடக்கு- கிழக்கை தமிழர்ககளின் தேசமாக அங்கீகரியுங்கள் – சீறிதரன்

சிங்கள இளைஞர்களே நாம் உங்களோடு கை கோர்க்கத் தயார், அதற்கு பதிலாக நீங்கள் முக்கிய வாக்குறுதிகளை தரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இளைஞர்கள் இப்போது தான் தமிழ் சிங்களம் என்ற வேற்றுமையை மறந்து ஒரு சிங்க கொடிக்கு கீழே ஒன்றாக இருக்கவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். இதுவரை காலமும் இவ்வாறான ஒரு நிலை இருக்கவில்லை. உங்களோடு நாம் சேர வேண்டும் என்றால், நீங்கள் எங்களுக்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டும். வடக்கு கிழக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ? உங்களிடம் வந்து யாரிடம் பேசுவது. இதை நீங்கள் தெளிவாக கூறுங்கள். அன்று நீங்கள் பாற்சோறு உண்டதை நாம் மறக்க மாட்டோம். அதற்காக உங்களை நாம் பழிவாங்க மாட்டோம்.

தமிழ் மக்கள் மூன்று தடவை ராஜ பக்ச அரசை நிராகரித்தவர்கள். அப்போது சிங்கள பௌத்த சிந்தனையோடு தான் நீங்கள் அனைவரும் இருந்தீர்கள். நாட்டை நிர்வகிக்க தெரியாத, படிப்பறிவு இல்லாதா, பொருளாதார நுணுக்கம் தெரியாத ராஜ பக்சாக்களிடம் இந்த நாட்டைக் கொடுத்தால் இந்த நாட்டு என்னவாகும். அன்று இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று உழைத்த சோபித தேரர் கூறுகின்றார் நாம் தவறு செய்ய வேண்டும் என்று இப்போது என்றாலும் நீங்கள் சொல்ல முடியுமா? வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று அறிவிக்க முடியுமா என்றார்.

Spread the love