ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

இந்தியா – நியூசிலாந்து அணி கள் இடையிலான 3-ஆவது மற் றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது. நாணயச்சுழற்சியில் ஜெயித்த நியூசிலாந்து கப்டன் டாம் லாதம் முதலில் இந்தியாவை துடுப்பாட்டம் செய்ய அழைத்தார். அதன்படி கப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30- ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இதனையடுத்து சுப்மன் கில்லும் 72 பந்துகளில் சதத்தை சுவைத்தார். தனது 21 -ஆவது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4-ஆவது சதமாகும். ஒரு நாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்கா ரர்கள் இருவரும் சதம் காண் பது இது 10-வது நிகழ்வாகும்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 385 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 101 ஓட்டங்கள் எடுத்து தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (46) ஆகியோருக்கு அடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குடன் (30 சதம்) 3-வது இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.

Spread the love