ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் ?

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு – கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு – கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

 மேஷம்: 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். திடீர் பண வருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்த வேலையிலும் கவனமாக இருந்தால் நல்லது.

 ரிஷபம்: உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணத்தடைகள் நீங்கும். தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும். சமுகத்தொடர்புகள் அதிகரிக்கும்.சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும்.

 மிதுனம்: ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்.மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும் காரிய வெற்றி உண்டாகும். வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும். குழந்தைகளால் மன வருத்தம் உண்டாகும். எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குல தெய்வத்தை வணங்குவது நல்லது.

 கடகம்: நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதலுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். கல்வியில் தடை உண்டாகும். சற்று நிதானமாக செய்படுவது நல்லது.

 சிம்மம்: பலவிதமான பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். தெய்வ நம்பிக்கை குறையும்.

 கன்னி: ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும் தம்பி,தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனைவி அல்லது கணவன் மூலம் எதிர்பாரத பண வரவுகள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு பல், கண் சம்பந்தமான நோய்கள் வரும் கவனம் தேவை.

 துலாம்: ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். aதே சமயத்தில் கேது வந்து அமர்கிறார். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

 விருச்சிகம்: கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. ஏழரை சனியால் அவதிப்பட்டு பின்னர் விடுபட்டாலும் ஜென்ம கேது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுநாள் வரை யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. திருமணம் கை கூடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைப்படும். உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும். சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும். தெய்வீக கனவுகள் வரும்.

 தனுசு:இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். எற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார். ஆனால் இனி ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைப்பட்ட காரியத்தை செவ்வன செய்து முடிப்பீர்கள்.ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும்.

 மகரம்: ராகு,கேது. இனி சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.மாமியாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் விருப்பங்கள் இனி தடையின்றி நிறவேறும்.வீட்டுக்கு பழுது நீக்கி செப்பனிடும் செலவுகள் உண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்.

 கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காது. உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

 மீனம்: திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்.வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும். மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் எட்டிப்பார்க்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும். தடைப்பட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Spread the love