ரயில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

ரயில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பயணிகள் போக்குவரத்து கட்டணம், சரக்கு போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Spread the love