யூரியா உரத்தின் விலையை நாளைமுதல் குறைக்க தீர்மானம் !

50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10,000 ரூபாவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றது. இதனிடையே, 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரம் கப்பல் மூலம் அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. குறித்த கப்பலில் இருந்து உரத்தை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love