யாழ்-சென்னை விமான சேவை இன்றுமுதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகம் – சென்னைக்கான விமானம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்திற்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வாரத்தில் திங்கள், செவ்வாய் வியாழன், சனி ஆகிய 4 நாட்கள் சேவை இடம்பெறும். சென்னையிலிருந்து புறப்படும் விமானம் முற்பகல் 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைவதற்கும் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து நண்பகல் 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன

Spread the love