முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை

வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி, முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017 ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார்.

தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர், 6 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராவார். தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டு கால சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. சொத்துக்களை மறைத்து ஏமாற்றியதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தின் சவுத் வோர்க் கிரவுன் நீதிமன்றில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணைகளின் முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Spread the love