மீண்டும் விஜயுடன் இணையும் ஷங்கர்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இதில் விஜயுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர் மீண்டும் விஜயுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விஜயிடம் படத்தின் ஒன்லைனை ஷங்கர் கூறியதாகவும், இது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு பின்னர் ஷங்கர் இப்படத்தின் முழு ஸ்க்ரிப்ட் பணிகளை முடிக்கவுள்ளதாகவும், இப்படம் ‘தளபதி 69’ அல்லது ‘தளபதி 70’ படமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜயுடன் ஷங்கர் இணையவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Spread the love