மீண்டும் வரும் அயர்ன்மேன்- மார்வெல் தெரிவிப்பு


உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோ படங்களால் புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெலில் ஸ்பைடர்மேன். தோர். ஹல்க் என பல சூப்பர்ஹீரோ சுதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அதில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் அயர்ன்மேன். டோனி ஸ்டார்க் என்னும் பணக்காரர் கவச உடை அணிந்து அயர்ன்மேனாக செய்யும் சாகசங்கள் ரசிகர்களிடையே பிரபலம். புகழ் பெற்ற அயர்ன்மேன் கதாப்பாத்திரத்தில் ரொபர்ட் டோனி ஜூனியர் நடித்திருந்தார்.

கடந்த 2019ல் வெளியான அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் தானோஸை அழிப்பதற்காகவும், உலகத்தை காப்பாற்றுவதற்காகவும் அயர்ன்மேன் இறப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அயர்ன் மேனின் இழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து வந்த மற்ற படங்களில் அயர்ன்மேன் கேமியோ  ரோலாவது வரமாட்டாரா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படங்களில் அயர்ன்மேன் மீண்டும்  படங்களில் தோண்றவுள்ளதாக மார்வெல் தெரிவித்துள்ளது.

Spread the love