நம்பிக்கையைத் தராத ஐ.எம்.எப்.பின் கருத்து- கடனுதவிக் காலம் பற்றி கூற முடியாது

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும்(ஐ.எம்.எப்.) இடையில் 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவது தொடர்பான ஊழியர் ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் கடனுதவி கிடைக்கும் என இலங்கை நம்பிக்கை தெரிவித்த போதிலும், அதை வழங்குவதற்கான கால அளவு குறித்து அறிவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Nikkei Asia செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மசாஹிரோ நோஸாகி ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கடன் நிவாரணம் கிடைக்கும் வரை கால அவகாசம் அறிவிப்பது கடினம். இதில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீண்டு வர முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love