மாடி குடியிருப்பின் மீது வீழ்ந்த ரஷ்ய போர் விமானம்- நால்வர் பலி, 25 இற்கும் அதிகமானோர் காயம்

ரஷ்யாவின் Yeysk நகரிலுள்ள மாடி குடியிருப்பொன்றின் மீது போர் விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது 25 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

விமானம் வீழ்ந்ததை அடுத்து குறித்த மாடி குடியிருப்பில் தீ பரவியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, விபத்திற்குள்ளான Su-34 ரக போர் விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Spread the love