மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி வரலாற்றுச் சாதனை

உலகிலேயே முதன்முறையாக, ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பன்றியின் இதயம் மனிதர்களின் இதயத்துடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் அதனை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதான இதயநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. ஆனால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதை அடுத்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு வெற்றி கரமாகப் பொருத்தியுள்ளனர். பன்றியின் இதயத்தை அறுவைச்சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love