பூமிக்கு அருகில் அண்மித்துள்ள சிறிய கோள் – NASA எச்சரிக்கை தகவல்

சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் சிறிய கோள் வருகிற 18ம் திகதி பூமிக்கு அருகில் வர உள்ளதாக எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சூரிய மண்டலம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது அதில் இருந்து வெளிப்பட்ட பாறைத்துகள்கள் ஒன்றாக இணைந்து ஆயிரக்கணக்கான சிறிய கோள்கள் உருவாகின.

சூரிய மண்டலத்தை சுற்றி வரும் இந்த சிறிய கோளானது, “ஆஸ்டராய்டு” என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய சிறிய கோள்களில் ஒன்றானது, பூமிக்கு அருகே வருகிற 18ம் திகதி மாலை நான்கு 51 மணிக்கு வரவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 1994 ஆண்டில் ஆஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட 7482 என்றழைக்கப்படும் இந்த சிறிய கோள், 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை ஒட்டி செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவைவிட ஐந்து மடங்கு அதிகம். இந்த சிறிய கோள் மணிக்கு 47 ஆயிரத்து 344 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த சிறிய கோளானது மூன்றாயிரத்து 300 அடி வரை பிரமாண்ட உயரம் கொண்டதாக இருப்பதாக கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள், இதனால் பூமிக்கு ஆபத்து குறைவே என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரமாண்ட சிறுகோள்கள் பூமியை தாக்குவது ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ நிகழ்வாகவும் கருதப்படுகிறது. சூரிய மண்டலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோள்கள் பூமிக்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கும் நாசா விஞ்ஞானிகள், இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பூமியை தாக்கக் கூடியவையாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

https://eyes.nasa.gov/apps/asteroids/#/asteroids?time=2022-01-17T05:16:38.200+00:00&rate=1

Spread the love