அம்பாறை விபத்தில் மூவர் பலி

அம்பாறை – தமன – எங்கலோய பிரதேசத்தில் கார் மற்றும் லொறி ஆகியன நேருக்கு நேர் மோதி நேற்று (16/01) விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love