மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனையில் உச்சம் தொட்ட சாம்சங்

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது கேலக்ஸி சட் சீரிஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது முந்தைய கேலக்ஸி சட் சீரிஸ், ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையாகும்.

இந்த ஆண்டு கேலக்ஸி சட் சீரிஸ் மாடல்களின் விற்பனை 80 லட்சம் யூனிட்களை கடக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதுதவிர கேலக்ஸி சட் போல் 3 மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஸ்மார்ட்போன்கள் முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தவர்களும் கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களை வாங்கியுள்ளனர். கேலக்ஸி நோட் 20 மாடலுடன் ஒப்பிடும் போது கேலக்ஸி ப்ளிப் 3 மாடலை வாங்குவோர் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரித்து இருக்கிறது,’ என சாம்சங் அறிவித்துள்ளது.

Spread the love