BMW அறிமுகம் செய்யும் “பச்சோந்தி கார்”

உலகிலேயே பட்டனை அழுத்தினால் நிறம் மாறும் காரை முதன்முதலாக பி.எம்.டபய்ள்யூ கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பி.எம்.டபள்யூ ஃப்ளோ 9 என்ற ஸ்போர்ட்ஸ் ரக எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் எலெக்ரிக் கண்காட்சியில் வெளியிட்டது. இ-இங்க் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் Electrophoretic முறைப்படி செலுத்தப்படும் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் வாகனத்தின் மேற்பரப்பில் விரும்பும் நிறத்தை பரவச்செய்கிறது. எவ்விதமான வர்ணப்பூச்சுகளையும் இந்த காரின் மீது பிரயோகிக்காத BMW நிறுவனம், நிறம் மாறுவதற்கு ஏற்ற வகையில், மேற்பரப்பின் மீது கனகச்சிதமாக Body Wrap செய்துள்ளது. Body Wrap பேனல் முழுவதிலும் சின்னஞ்சிறிய கேப்சூயுல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நேர்மறை மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்டுள்ள கேப்சூயுல்கள், கருப்பு நிறத்திற்கு மாறுவதற்கும், எதிர்மறை மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்டுள்ள கேப்சூயுல்கள், வெள்ளை நிறத்திற்கு மாறுவதற்கும் அதற்கு தக்க துணை மின்சாரத்தை பெறுகின்றன. BMW Flow 9 வெள்ளைநிறத்தில் காட்சி தரும்போது, Body Wrap-ல் குறுக்கு நெடுக்காக வரையப்பட்டுள்ள கோடுகள் காருக்கான அழகை மேலும் கூட்டுகிறது. வெள்ளை நிறமானது, கருப்பாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறுகையில் அந்த கோடுகள் மறைந்து விடுகின்றன.

source from polimer
Spread the love