இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தீர்மானம்

இலங்கை தேசிய கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர் ஒருவர் ஓய்வு பெற நினைத்தால், குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 07 ஆம் திகதி கூடிய இலங்கை கிரிக்கெட் செயற்குழுவினால் மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்படி தீர்மானத்திற்கு மேலதிகமாக மேலும் இரண்டு விடயங்களும் எடுக்கப்பட்டுள்ளன.


ஓய்வு பெற்ற வீரர்கள் வெளிநாட்டு தொடர் ஒன்றில் விளையாட வேண்டும் எனில், அவர்களுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதி குறித்த வீரர்கள் ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்த பின்னரே வழங்கப்படும். அதேநேரம் ஓய்வு பெற்ற வீரர்கள் உள்ளுர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கான அனுமதி, அவர்களுக்கு குறித்த உள்ளுர் கிரிக்கெட் தொடர்கள் ஒழுங்கு செய்யப்படும் திகதிக்கு முன்னர் நடைபெறுகின்ற உள்ளுர் கிரிக்கெட் தொடர்களில் 80 வீத போட்டிகளில் விளையாடினால் மாத்திரமே வழங்கப்படும். புதிதாக எடுக்கப்பட்ட இந்த தீர்மானங்கள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Spread the love