மஞ்சள் கலந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்

வயிற்றில் அல்சர் அல்லது வேறு உடல் நலப்பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது என்றால் நமக்கு வாய் புண் பிரச்சனைத் தான் முதலில் ஆரம்பிக்கும். இதற்கு எத்தனை மருத்துக்கள் சாப்பிட்டாலும் உடனே சரியாகிவிடாது. மஞ்சளில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், கிருமி நாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

மஞ்சள் என்றாலே மங்களரமானப் பொருள் என்று தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். அதற்கேற்றால் போல் தான் மஞ்சளும் நாம் சமைக்கு உணவுப்பொருள்களுக்கு நிறத்தை வழங்குவதோடு, உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம் என இந்த மூன்றில் இருந்தும் மஞ்சளை ஒருபோதும் யாராலும் பிரிக்க முடியாது.

குறிப்பாக வீட்டில் லேசாக அடிபட்டவுடன் பெண்கள் முதலில் தேர்வு செய்யும் மருந்துகளில் ஒன்று தான் மஞ்சள். இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்புகள், கிருமிநாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் என ஏராளாமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் நமக்கு அளிக்கிறது. அதிலும் மஞ்சள் நீர் அருந்துவது என்பது உடலுக்கு ஏராளாமான பயன்களை அளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வாய் புண்களில் இருந்து நிவாரணம்:

வயிற்றில் அல்சர் அல்லது வேறு உடல் நலப்பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது என்றால் நமக்கு வாய் புண் பிரச்சனைத் தான் முதலில் ஆரம்பிக்கும். இதற்கு எத்தனை மருத்துக்கள் சாப்பிட்டாலும் உடனே சரியாகிவிடாது. எனவே தான் இதற்கு மஞ்சளைப் பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்கு வாய் புண்கள் இருந்தால் மஞ்சள் நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம். இது சிறந்த தீர்வாக அமையும்.

வாய் புத்துணர்ச்சிக்குத் தீர்வு காணுதல்:

நாள் முழுவதும் உங்களுக்கு வாய் ப்ரெஷ்னர் எதுவும் தேவையில்லை. மஞ்சள் நீரை மட்டும் பயன்படுத்தினால் போதும். மஞ்சள் நீர் உங்களது வாயில் இருக்கும் அனைத்து வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொன்று உங்களது ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

தொண்டை வலிக்கு நிவாரணம்:

மக்களை பல்வேறு இன்னல்களைச் சந்தித்த கொரோனா காலக்கட்டத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் பயன்படுத்திய உன்னத மருந்து தான் மஞ்சள். அதிலும் தொண்டை வலி பிரச்சனையை சரிசெய்ய மஞ்சளைக் கொண்டு வாய் கொப்பளித்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். எனவே தொண்டை வலிப்பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது மஞ்சள்.

Spread the love