போர்க் குற்றம் தொடர்பான ஆதாரங்களை திரட்ட அதிக நிதி- ஐ.நா. விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவார்கள்!

ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழக்கிழமை இலங்கை தொடர்பாக உள்ளீர்க்கப்பட்ட தீர்மானத்தில் போர்க் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐ.நா.விடம் அதிக நிதி கோரப்பட்டுள்ளதுடன் விசாரணையாளர்கள் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் வியாழனன்று இடம்பெற்ற வாக்களிப்புக்கு முன்னராக, ஐ.நா.வின் நிகழ்ச்சித்திட்ட, திட்டமிடல் மற்றும் வரவு-செலவுத் திட்டப் பிரிவின் பணிப்பாளர் ஜோஹன்னஸ் ஹுயிஸ் மேன்,மனித உரிமைகள் பேரவையின் ஏ /எச் ஆர் சி /51/எல் .1 ஆர் ஈ வி1 தீர்மானத்திற்கான வரைவுத் திட்டத்தில் இருந்து எழும் வரவு-செலவு தொடர்பான தாக்கங்களை விளக்கி செயலாளர் ஹுய் லூவுக்கு எழுதியிருந்தார்.

பிரதானமாக , இரண்டு முக்கிய செயற்பாட்டு பத்திகளின் (ஓ பி 8 மற் றும் ஓ பி 19) கட்டளையை செயற்படுத்த, மனிதஉரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு 16 பணியாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான செலவுகள் தேவைப்படும், இதற்கு அடுத்த 24 மாதங்களில் செப்ரெம்பர் 2024 வரை 6.092மில்லியன் டொலர் செலவாகும். முன்னைய 46/1 தீர்மானம் தொடர்பாக ஹுய்ஸ்மான் எழுதுகையில் அடுத்த 18 மாதங்களுக்கு உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு 12 பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள் மற்றும் அவர்கள் தொடர்பான செலவுகள் 2.856 மில்லியன் டொலர் ஆகுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா. பொதுச் சபையில் 5ஆவது குழுவினால் , அந்த வரவு செலவுத் திட்டத்தில் 0.75 மில்லியன் டொலர் குறைக்கப்பட்டது. இந்த வெட்டு 2022 பட்ஜெட் ஒதுக்கீட்டின் 9 மாதங்களுக்குப் பயன்படுத்தப்படும். எவ்வாறாயினும், இந்த 51/எல் 1/ஆர் ஈவி 1க்கான இந்தப் புதிய பட்ஜெட் கோரிக்கையில், 2022 ஆம் ஆண்டின் மீதமுள்ள 3 மாதங்களுக்கு மேலும் 0.567மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 46/1இற்கான பட்ஜெட்டுக்கு எதிராக செய்யப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வெட்டை இல்லாமல் செய்யும் இந்த புதிய பட்ஜெட் கோரிக்கை ஒதுக்கீடு பின்வருமாறு:

2022 (அடுத்த 3 மாதங்கள்) 0.567மில்லியன் டொலர் , 2023 (12 மாதங்கள்) 3.398மில்லியன் டொலர் மற்றும் 2024 (9 மாதங்கள்) 2.127 மில்லியன் டொலர் ,  மொத்தம் 6.092 மில்லியன் டொலர் 3 களாகும். இந்த பட்ஜெட் கோரிக்கையில் பயணச் செலவு பின்வருமாறு:

2022 இல் தகவல் சேகரிப்புக்காக இரண்டு ஊழியர்களால் ஐரோப்பாவிற்குள் 5 வேலை நாட்கள் ஒரு பயணம் 2023இல் தகவல் சேகரிப்புக்காக இரண்டு ஊழியர்களால் ஐரோப்பாவிற்குள் 5 வேலை நாட்கள் ஒரு பயணம். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தகவல் சேகரிப்பதற்கும் மூன்று ஊழியர்களால் 5 வேலை நாட்களில் இலங்கையின் கொழும்புக்கு ஒரு பயணம். 7 வேலை நாட்கள் மற்றும் வார இறுதியில் ஒரு பிராந்திய இருப்பிடத்திற்கு ஒரு பயணம். பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைகளை ஒழுங்கமைக்கவும் பங்கேற்கவும் மற்றும் தகவல் சேகரிப்பில் பங்கேற்கவும் இரண்டு ஊழியர்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் பேரவைக்கு எழுதப்பட்ட இற்றைப்படுத்தல், வாய்வழி புதுப்பிப்புகளுக்கான தயாரிப்பில் ஆலோசனைகளை நடத்துவதற்கு ஒரு பணியாளர் இலங்கைக்கு 5 வேலை நாட்களில் இரண்டு பயணங்கள்.

2024இல் தகவல் சேகரிப்புக்காக இரண்டு பணியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஒரு பிராந்திய இடத்திற்கு 5 வேலை நாட்களில் ஒரு பயணம். தகவல் சேகரிப்புக்காக இரண்டு ஊழியர்களால் வட அமெரிக்காவிற்கு 5 வேலை நாட்களில் ஒரு பயணம். பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைகளை ஒழுங்கமைக்கவும் பங்கேற்கவும் இரண்டு பணியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஒரு பிராந்திய இடத்திற்கு 7 வேலை நாட்கள் மற்றும் வார இறுதியில் ஒரு பயணம் மனித உரிமைகள் பேரவைக்கு விரிவான அறிக்கையைத் தயாரிப்பதற்காக ஆலோசனைகளை நடத்துவதற்காக இரண்டு ஊழியர்களால் 5 வேலை நாட்களில் இலங்கைக்கு ஒரு பயணம். அடுத்த 24 மாதங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு பணியாளர்கள் இலங்கைக்கு பயணம் செய்விருப்பதை இது பட்டியலிடுகிறது.

இதில் சில தகவல்களை திரட்டுவதற்காகும். ஆயினும் ஆதாரங்கள் சேகரிப்பு உள்ளதா என்பது பற்றி தெளிவில்லை ஏனைய செலவில், செய்மதி படங்கள்/பகுப்பாய்வு மற்றும் யூ என் ஐரி ஆர் /யூ என் ஓ எஸ் எரி (2023 இல் ஒன்று மற்றும் 2024 இல் ஒன்று) உடன் இணைத்தல் ஆகியவை அடங்கும். இது போரின் உச்சக்கட்டத்தின் போது பெறப்பட்ட செய்மதி படங்களின் ஆதாரங்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் தெளிவாக உள்ளது. புதிய விசாரணைகளுக்கு நிதி ஒதுக்கீடு, குறிப்பாக பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள், மனித உரிமைகள் பேரவை செயலகத்தின் ஒரு படி முன்னேற்றமாகும். அந்த விசாரணைகளின் கண்டுபிடிப்புகள், மனித உரிமை மீறல் நிகழ்வுகளை அடையாளம் காண்பதைத் தவிர, பொருளாதார நெருக்கடி எவ்வாறு உருவானது என்பதை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love